பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை: பொலிஸார் அதிரடி நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் செய்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் அவரை கைது செய்த சந்தர்ப்பத்தில் சந்தேகபரிடம் இருந்து 06 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வீட்டில் 1080 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 56 நிமிடங்கள் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
