வறட்சியால் இறக்கும் இலட்சக்கணக்கான மீன்கள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காணரமாக முல்லைத்தீவு - மல்லாவி ஏரியில் இறந்து கிடக்கும் இலட்சக்கணக்கான மீன்களை சேகரித்து அப்பகுதி மக்கள் பலர் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு இறந்த மீன்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை பொலிஸார் அனுமதிக்கக் கூடாது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மல்லாவி குளத்தில் மீன் விற்பனை செய்பவர்களைக் கைது செய்ய பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு சுகாதார அதிகாரிகள் மல்லாவி ஏரிக்கு சென்று மீன்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், முதற்கட்டமாக அதிக சூரிய ஒளியினால் மீன்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம்
இறந்த மீன்களின் மாதிரிகளை எடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கும் வரை மல்லாவி ஏரியின் மீன்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முல்லைத்தீவு விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள், ஏரிகளின் நீர் மட்டம் தொடர்பில் மீன்பிடி விரிவாக்க உத்தியோகத்தர்கள் அக்கறை காட்டவில்லை.
மேலும், இலட்சக்கணக்கான மீன்களை ஏரிகளில் விடுவதால் மீன்கள் இறந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
மீன்கள் இறந்து கிடப்பதால் மல்லாவி குளத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசத் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
