செல்பி புகைப்படத்தால் இளைஞர்கள் இருவருக்கு நேர்ந்த விபரீதம்
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (14) மாலை இடம் பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்த வேளையில் கையடக்க தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறுக்கே வந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதனை அடுத்து இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் வவுனியா- பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 மட்டும் 30 வயது உடையவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
