வடக்கு - கிழக்குக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கமாட்டோம்: சஜித், அனுரவிடம் கோரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் சிங்கள மக்களிடம் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்வதற்கு அப்பால் இது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி
''நாட்டின் இறையாண்மையை மீறுவதற்கு சில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதாகவும், ஆனால் அதனை நாட்டிற்கு வெளிப்படுத்தாதது தொடர்பில் ஜனாதிபதிவுடன் தமது சங்கத்துக்கு முரண்பாடு காணப்படுகின்றது.
அரசாங்கமும், அமைச்சர்களும் செல்லும் வழி சரியான வழியல்ல. நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்காக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் அமைச்சர் ஒருவரால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதியும் போக்குவரத்து துறையின் வளர்ச்சியில் தலையிடவில்லை.”
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |