யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து
யாழ்ப்பாணம் (Jaffna) - தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்று (01.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவரே விபத்தில் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை கொழும்பில் இருந்து ஏற்றிக் கொண்டு யாழ். நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் (இரு சக்கர உழவியந்திரம்) பின்னால் சென்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் லான்ட் மாஸ்ரர் (இரு சக்கர உழவியந்திரம்) சாரதி உட்பட லான்ட் மாஸ்ரரில் பயணித்த மூவர் மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவருமாக மொத்தம் நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - தீபன்

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்கு பின்னால் பலத்த சந்தேகங்கள்: பல்கலைக்கழக பேராசிரியை குற்றச்சாட்டு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam