இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவிப்பொருளாளராக வவுனியா இளைஞர் தெரிவு
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவிப்பொருளாளரிற்கான தேர்தலில் வவுனியாவை சேர்ந்த அருணகிரிநாதன் நாகராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாக சபை தேர்தல் இன்று இடம்பெற்றது.
குறித்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பொருளாளர் பதவிக்கு அ.நாகராஜன் போட்டியிட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று குறித்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நான்கு வருடங்கள் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இரண்டு வருடங்கள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முக்கிய பதவிக்கு வவுனியாவில் இருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.







போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
