சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது
திருகோணமலை - கந்தளாய் காட்டுப் பகுதியில் நீண்ட காலமாக மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களை திருகோணமலை வனவிலங்கு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (15) கைது செய்துள்ளனர்.
கந்தளாய் காப்புக்காடு பகுதியில் உள்ள அரச தேக்கு தோட்டங்களிலிருந்து வெட்டப்பட்ட மரங்கள் இதன்போது கைப்பற்றப்பட்ட்டுள்ளன.
இம்மரங்கள் மாட்டு வண்டிகள் மற்றும் படகுகள் மூலம் கிண்ணியாவிற்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்ததை அடுத்தே இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதோடு கால்நடைகள் அடங்கிய நான்கு வண்டிகளும் வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
திருகோணமலை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
