கடல் மார்க்கமாக இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 17.74 கிலோகிராம் தங்கம் பறிமுதல்
கடல் மார்க்கமாக இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட, 10.5 கோடி மதிப்புள்ள 17.74 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது நேற்று முன்தினம் (08.02.2023) தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சந்தேகப்படும் வகையில் தப்பிச்செல்ல முயன்ற படகு ஒன்று கைப்பற்றப்பட்ட போது, அதில் இருந்தவர்கள், பொதிகளை கடலில் வீசியுள்ளனர்.
சட்ட நடவடிக்கைகள்
இதனையடுத்து கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் படகில் பயணித்த மூவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மண்டபம்
கடற்கரை பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
