முறையான அனுமதியின்றி கடத்தப்பட்ட கடலட்டைகள் ஏலத்தில் விற்பனை
யாழ்ப்பாண நகரில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட 3111 கடலட்டைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த கடலட்டைகள், பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் ஊடாக 11,19,960 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடலட்டைகளை ஏற்றிச் சென்ற சிறிய கன்டர் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்கள் கைது
வாகனத்தில் இருந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டைகளும், சந்தேகநபர்களும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 3111 கடல் அட்டைகள் 11,19,960க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.