உடன் நடவடிக்கை எடுக்கவும்! ஜனாதிபதி உத்தரவு (செய்தி பார்வை)
கடந்த அரசாங்கத்தின் காலத்தின் போது இறக்குமதி செய்யப்பட்ட தொடருந்து பெட்டிகளின் தொழிநுட்ப கோளாறுகளை சரிசெய்து, அவற்றை உடனடியாக போக்குவரத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தின் போது 160 தொடருந்து பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அவற்றில் 120 தொடருந்து பெட்டிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 40 பெட்டிகள் மாத்திரமே போக்குவரத்துச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துச் சேவையில் இணைக்கப்படாத ஏனைய பெட்டிகளை உடனடியாகச் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam