இளைஞர் சமூக சம்மேளனத்தில் சேகுவேரா படையணி
நாட்டில் உள்ள இளைஞர் சமூக சம்மேளனங்களை மக்கள் விடுதலை முன்னணியின் சேகுவேரா படையணியாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இளைஞர் சமூக சம்மேளனம்
“இளைஞர் சமூக சம்மேளனம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாகவே நடத்தப்படுகிறது. தேசிய இளைஞர் சேவை மன்றத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது.
அவ்வாறு இருக்கையில் இளைஞர் சமூக சம்மேளனங்களுக்கான பதவி நியமனங்களுக்கான உறுப்பினர்கள் இதுவரை காலமும் அங்குள்ள உறுப்பினர்களாலே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த முறை அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் வட்சப் குழுவொன்றை உருவாக்கி, அதன் ஊடாக இளைஞர் சம்மேளனங்களுக்கு உறுப்பினர்களை பெயரிட்டு அனுப்புகிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கிராமங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அதிகமான இளைஞர் சமூக சம்மேளன கூட்டங்களில் இருந்து இளைஞர்கள் வெளியேறி இருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




