த.வெ.க தலைவரை கடுமையாக கேலி செய்த சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதன் உறுப்பினர்களை கடுமையாக கேலி செய்துள்ளார்.
இது த.வெ.க. தொண்டர்கள் மத்தியிலும் விஜய் இரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுக்கூட்டம் ஒன்றில் கருத்துரைத்த சீமான், "தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துகின்றனர். எனக்கோ அது தலைவிதி தலைவிதி என்று கேட்கிறது.
பரபரப்பு நிலை..
அத்துடன், எதற்காக வருகை தந்தீர்கள் எனக் கேட்டால் TVK TVK என்று கத்துகின்றனர். டீ விற்கவா இவ்வளவு பேர் வந்திருக்கின்றீர்கள்” என விமர்சித்துள்ளார்.
மேலும், "புலி வேட்டைக்குச் செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. அணிலே ஓரமாக போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை" என்று சீமான் கேலி செய்துள்ளார்.
இந்நிலையில், சீமானின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
