இராணுவத்தால் எங்கள் நாடே இரத்தமாக ஓடியது! சீமான் காட்டம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பில் காங்கிரஸ் கட்சிக்கு நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய போது, ராஜீவ் காந்தி என்ன தியாகியா? அவர் தானே ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். ஒரு இராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்தவர் அவர் தான் என்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், சீமானின் உருவ பொம்மையும் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சீமான் ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ளார்.
அதில், இரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே! உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே இரத்தம் வருவது? நீங்கள் அனுப்பிய இராணுவத்தால் எங்கள் நாடே இரத்தமாக ஓடியதே.. அதற்கு என்ன சொல்வது? நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாக இருந்து யோசியுங்கள். உண்மைபுரியும் என தெரிவித்துள்ளார்.
ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே!
— சீமான் (@SeemanOfficial) May 22, 2022
உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது?
நீங்கள் அனுப்பிய ராணுவத்தால் எங்கள் நாடே ரத்தமாக ஓடியதே..
அதற்கு என்ன சொல்வது?
நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாகஇருந்து யோசியுங்கள்.
உண்மைபுரியும்!
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam