ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் றிசார்ட் பதியூதீன்
முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன், ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜயந்த சமரவீர வெளியிட்ட கருத்தால் தமக்கு சிரமங்களும், கடும் அசௌகரியங்களும் ஏற்பட்டுள்ளதாக றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தனக்கு ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜயந்த சமரவீர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார் எனவும் றிசார்ட் பதியூதீன் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடடுள்ளார்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri