அநுரவை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள்.. எழுந்துள்ள கடும் விமர்சனங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் நடமாடிக் கொண்டிருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கடும் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் ஜனாதிபதிகளுக்கு மட்டும் எதற்காக கடுமையான பாதுகாப்பு என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
ஆட்சிக்கு வரமுன்
தாம் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை கோல்பேஸ் மைதானத்தில் அணிவகுக்க வைத்து, குறித்த பாதுகாப்புப் பிரிவைக் கலைத்து அதன் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக உறுதியளித்திருந்தார்.
அதேநேரம் ஆட்சிக்கு வர முன்னதாக பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு எந்தவொரு அரசியல்வாதிக்கும் தேவையில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் இப்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எங்கு சென்றாலும் நூற்றுக் கணக்கான ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடுமையான பாதுகாப்பு
இந்நிலையில் ஜனாதிபதிக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்றும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் அவர் உலங்குவானூர்தி பயணங்களை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் லால்காந்த அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதிக்கான கடுமையான பாதுகாப்பு மற்றும் அமைச்சர் லால்காந்தவின் கருத்து என்பன தற்போது சமூக வலைத்தனங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
முன்னைய காலங்களில் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு குறித்து அநுரகுமார விமர்சித்தது, வெறும் வாய் வார்த்தைதானா? அன்றைய ஜனாதிபதிகளை நெருக்கடியில் சிக்க வைக்கும் நோக்கில் அவர் அவ்வாறான கருத்துக்களை வெளியிட்டாரா? பொதுமக்களுக்கு போலி வாக்குறுதி வழங்கி ஏமாற்றினாரா என்றெல்லாம் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
