இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்
நடப்பு ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
2025ஈம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த ஏழு மாத காலப் பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவில் இருந்தே கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
அரசாங்கத்தின் இலக்கு
அதன் பிரகாரம் இந்தியாவில் இருந்து 269,780 பேரும் 124,652 பேர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும், 114,644 பேர் ரஷ்யாவில் இருந்தும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையே நடப்பு ஜுலை மாதத்தில் மட்டும் 145,188 பேர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் குறைந்த பட்சம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவைப்பது அரசாங்கத்தின் இலக்காகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
