முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பை வழங்குவார்கள் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் யாருக்கும் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் மேற்கொண்ட பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மதிப்பாய்வு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிரான் அலஸ் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு அமைச்சர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், யாருடைய உயிருக்கும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால், குறித்த விடயம் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
