கல்வி அமைச்சின் அறிவிப்பு.. வடமாகாண கல்வித் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
மத்திய கல்வி அமைச்சு முதலாம் தவணைக்கான பரீட்சைகளை இரத்துச்செய்துள்ள போதிலும் வடமாகாண கல்வி அமைச்சு இவ்வறிவுறுத்தலை பின்தள்ளி பரீட்சைகளை நடாத்த முனைப்புடன் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை பதிப்பகங்களில் பெறப்படும் சலுகை கொடுப்பனவுக்கா என்ற கேள்வியை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்
வெளியான சுற்று நிருபம்
கல்வி அமைச்சின் சுற்று நிருபம் ED/17/03/01/01/01 திகதி 2026.01.02 இன் பந்தி 4.7இல் குறிப்பிட்டதற்கு அமைவாக தரம் 7-11 வரையும் புதிய தரம் 6 இற்கும் பரீட்சைகள் நடாத்தப்பட கூடாது.

இருப்பினும், வடமாகாண கல்வி அமைச்சு முதலாம் தவணை விஞ்ஞான பாட செயன்முறைப்பரீட்சை (கடித இல. NP/20/ED/Sc/Gen திகதி 12.02.2026) ஊடாகவும் தவணை பரீட்சை தொடர்பாக வெறுமனே கையொப்பம் இடப்பட்ட நேரசூசி ஊடாகவும் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே, கல்வி அமைச்சின் முதலாம் தவணையில் விளையாட்டுப் போட்டிகள் காரணமாக பரீட்சைகள் இடைநிறுத்தப்படும் என்கின்ற சுற்று நிருபம், மேற்குறிப்பிட்ட இந்த வருடத்திற்கான புதிய சுற்று நிருபம் என அனைத்தையும் புறம்தள்ளி மத்திய அதிகாரத்தை புறம் தள்ளி மாகாண கல்வித் திணைக்களம் செயற்படுவது மாணவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் செயற்பாடாக அமையக்கூடும்.

