தெல்லிப்பழை கல்லூரி விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
பாடசாலை நிகழ்வுகள் இராணுவ - பொலிஸ் தலையீடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தீலீசன் (Deepan Thilesan) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தி குறிப்பில்,
"பாடசாலைகளில் நடைபெற்று வரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிஸாரினதும் இராணுவத்தினரதும், அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித அடிப்படை உரிமை மீறலாகும்.
இலங்கை அரசின் சட்ட வரையறைக்குற்பட்டு கருத்தியல், கலை, குறியீட்டு மூலமாக சமூகம் சார் சிந்தனைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது.
மனித உரிமைகள்
இதற்கு கல்வி திணைக்களங்களும் துணை போகுமானால், கல்விக்குள் இராணுவ மற்றும் பொலிஸ் தலையீடுகளை ஆதரிக்கும் செயற்பாடுகளாகவே இவை அமையும்.
அண்மையில் நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின், இல்ல அலங்காரங்களில் மாணவர்கள் வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனசாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும்.
கல்வி அமைச்சின் தலையீடு
இந்த விடயங்களில் பொலிஸாரோடு இணைந்து வடமாகாண கல்வி அமைச்சும் தலையீடு செய்வதென்பது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடு என்பதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடாகும்.
இவ்விடயம் தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொருத்தமான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி News Lankasri

எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
