கொழும்பு நகரில் முக்கிய இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு
போராட்டகாரர்கள் மற்றும் ஆர்ப்பாட்டகார்களின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக கூடிய ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, கொழும்பு 7 பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட கொழும்பு நகரின் முக்கியமான மற்றும் பிரதான இடங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவின் முன்னறிவிப்பு புலனாய்வுப் பிரிவுகள் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசபந்து தென்னகோன் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு
இதனடிப்படையில், கொழும்பு 7 பௌத்தாலோக்க மாவத்தையில்முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தியோபூர்வ இல்லத்திற்கு செல்லும் வீதி உள்ளடங்கும் வகையில் வீதி தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மகிந்த ராஜபக்ச அடிக்கடி பயணிக்கும் இடங்கள், தங்கி இருக்கும் இடங்களில் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களோ அல்லது தாக்குதல்களோ நடத்தப்படும் கூடும் என்பதால், உச்ச பாதுகாப்பை வழங்குவது சிறந்தது என புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மகிந்த மீது அதிருப்தி
தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் சிவில் அமைப்புகள் மாத்திரமல்லாது சிலர் நபர்கள் முன்னாள் பிரதமர் மீது அதிருப்தியில் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
கொழும்பில் கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் சில தினங்கள் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கி இருந்தனர்.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
