துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சஞ்சீவவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத பாதுகாப்பு தரப்பினர்
கொழும்பு- ஹல்ஃப்ஸ்டொர்ப் நீதிமன்ற அறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னர் எடுக்கப்பட்ட காணொளியின்படி, சுடப்பட்டு கீழே கிடந்தவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் பார்த்துக் கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காணொளியில், துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவா, சாட்சிக்கூண்டின் தரையில் கிடப்பதை காண முடிகிறது.அவரது மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் தெரிகின்றன.
எனினும் குழப்பத்தின் மத்தியில், பாதுகாப்புப் படையினர் பலர் நிலைமை தொடர்பில் விவாதித்து வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மருத்துவப் பயிற்சி இல்லை
அந்த மனிதன் உயிருடன் இருக்கிறாரா என்று கூட அவர்கள் யாரும் பார்க்கவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக சஞ்சீவ அழைத்துச் செல்லப்பட்டபோது, இறந்துவிட்டதாக தேசிய மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பாதுகாப்புப் படையினர் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டனர். அதேநேரம் அந்த நேரத்தில் சஞ்சீவ உயிருடன் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்தில் நோயாளர் காவு வண்டிகள் அவசர வாகனங்கள் போன்ற அவசர உபகரணங்கள் ஏன் தயார் நிலையில் இல்லை என்று ஒரு சமூக ஊடக பயனர் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் பொலிஸாருக்கு அடிப்படை மருத்துவப் பயிற்சி இல்லை என்றும் அந்த ஊடகப்பயனர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |