அசாத் மௌலானாவிடம் இருந்து மனோ கணேசனுக்கு கிடைத்த மேலும் பல இரகசியத் தகவல்கள்(Video)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை சம்பவம் மற்றும் கோட்டாபயவின் ஒட்டுக்குழுக்கள் தொடர்பான பல தகவல்களை நான் அறிவேன். விரைவில் நாடாளுமன்றத்தில் இவை அம்பலப்படுத்தப்படும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்று கூறப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருந்த அசாத் மௌலானா சனல் 4இற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகத்தான் அதிகமாக பேசப்படுகின்றது.
அதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலிருந்தே கோட்டாபய ராஜபக்ச தரப்பின் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் மூன்றாம் தரப்பு மூலமாக என்னை வந்து சேர்ந்திருக்கின்றன எனவும் மனோ கணேசன் கூறினார்.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொல்லப்பட்டது எப்படி, அவரை கொலை செய்யுமாறு உடனடியாக ஆணையிட்டவர் யார்? இறுதி உத்தரவு யாரிடம் இருந்து வந்தது என்ற தகவல்கள் எல்லாம் என்னை வந்து சேர்ந்திருக்கின்றன. உரிய தருணத்தில், சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான தகவல்களை நான் வெளிப்படுத்துவேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
