கிளிநொச்சியில் சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்பு: சாரதி கைது
கிளிநொச்சி - ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(27.03.2026) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வாகனம் ஒன்றில் சூட்சுமமாக கஞ்சா பொதி கடத்தப்படுவதாக கிளிநொச்சியில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
50 கிலோ கிராம் கஞ்சா மீட்பு
இதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து மறைத்து சோதனை செய்ய முற்பட்ட போது, குறித்த வாகனம் நிறுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை சுரத்திச் சென்று இடை மறித்து சோதனை மேற்கொண்ட போது, 17 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பொதிகள் ஏறத்தாழ 50 கிலோ இருக்கும் எனவும், இதன் பெறுமதி சுமார் 60 லட்சத்துக்கு அதிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட பொதி, வாகனம் மற்றும் சாரதியையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
