திருகோணமலையில் இரகசியமாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு (Photos)
திருகோணமலை- இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா
விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு
வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு
விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் இரகசியமாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 3ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் பெரும்பான்மை மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இச்செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam