தனியார் பேருந்து உரிமையாளர்களை பழிவாங்கும் அரசாங்கம்
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக அரசாங்கம் "தொடர்ச்சியான பழிவாங்கல்" செய்வதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்குற்றம் சாட்டியுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து தொழில்துறையினரிடையே கோபம் அதிகரித்து வருவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பழிவாங்கும் அரசாங்கம்
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது தனியார் பேருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக குறிப்பிடத்தக்க நிதி பங்களிப்புகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
"நாட்டிலிருந்து தனியார் பேருந்து கலாச்சாரத்தை அகற்ற முயற்சிப்பது நெருப்புடன் விளையாடுவது போன்றது" என்று அவர் எச்சரித்தார்.
சமீபத்திய வீதி விபத்துகளில் பெரும்பாலானவை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுடன் சம்பந்தப்பட்டவை என்ற போதிலும், அரசாங்கம் தனியார் பேருந்துத் துறையை படிப்படியாக ஒழிக்க முயற்சிப்பதாகவும் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டினார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் மற்றும் வரிகளை அவர் மேலும் விமர்சித்தார்.
பேருந்துகளை இறக்குமதி செய்வது மிகவும் கடினமாகிவிட்டது என்றும் "வரி செலுத்தாமல் ஒரு பேருந்தைக்கூட இறக்குமதி செய்ய முடியாது என்றும் முந்தைய அரசாங்கங்கள் இதுபோன்ற வரிகளை விதித்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்புவதில் கஜேந்திரகுமார் அணி மும்முரம் - மணிவண்ணன் குற்றச்சாட்டு




