21 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் சிக்கிய விமான நிலைய ஊழியர்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (AASL) ஊழியர் ஒருவர் ரூ.210 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
54 வயதான அந்த நபர், 5.94 கிலோ எடையுள்ள 24 கரட் தங்க பிஸ்கட்டுகளை வைத்திருந்தபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள் வெளியேறும் வாயிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்களின் காலுறைக்குள்
குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு கால்களின் காலுறைக்குள் மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் (staff gate) வழியாக கடத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




