அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் செயலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும், அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதெனவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று பகல் அவர் மருத்துவ நிலையமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளாரெனவும், வர்த்தக அமைச்சில் உள்ள அவரது அலுவலக அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவருடன் தொடர்புகளைப் பேணியதன் காரணமாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சோதனை முடிவுகள் இன்றிரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan