திருடப்பட்ட மாடுகளுடன் பிடிப்பட்ட ராஜாங்க அமைச்சரின் செயலாளர்
ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு சுமை ஊர்திகளுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தள பிரதேசத்தில் திருடப்பட்ட 22 மாடுகளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும் போது, சந்தேக நபர் லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைச்சிக்காக அறுக்கப்படவிருந்த மாடுகளை விடுவித்து மக்களுக்கு வழங்க கொண்டு செல்வதாக குறித்த சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இது குறித்து இலங்கை அகிம்சை மகா சங்கத்திற்கு அறிவித்து, அதன் தலைவரிடம் பெறப்பட்ட நன்றிக் கடிதத்தையும் சந்தேக நபர், பொலிஸாரிடம் காண்பித்துள்ளார்.
எனினும் சந்தேக நபர், மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்ய கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
