நீதியமைச்சின் செயலாளருக்கு விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியுயர்வு
தற்போது நீதி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி வரும் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேனவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தற்போதைக்கு நான்கு நீதிபதிகளுக்கான வெற்றிடயங்கள் உள்ள நிலையில், அதில் ஒன்றை நிரப்பும் வகையில் அயேஷா ஜினசேன, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன, சட்டமா அதிபர் திணைக்களத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி ஓய்வு பெற்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி
கடந்த 2024ஆம் ஆண்டின் நவம்பர் அவர் பதவி ஓய்வு பெற்றிருந்தார். எனினும் அதனையடுத்து மிக விரைவில் அவர் நீதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போதைக்கு தெரிய வந்துள்ள தகவல்களின் பிரகாரம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மிக விரைவில் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க முடிவு செய்துள்ளார்.
பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் எதிர்ப்பையும் மீறி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 67 ஆண்டுகளாக நீட்டிக்கும் முடிவை அரசாங்கம் நிறைவேற்றினால், பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2028 டிசம்பர் தொடக்கத்தில் ஓய்வு பெறுவார்.
பிரதம நீதியரசர் பதவி
அதன் பின்னர் முடிவடையும் பிரதம நீதியரசர் பதவிக்கு, அயேஷா ஜினசேனவை ஜனாதிபதி நியமிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, அதன்பின்னர் விரைவில் பிரதம நீதியரசர் பதவியிலும் அமர்த்தப்பட்டால், குறைந்தது 5-7 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri