தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள வேண்டுகோள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் முதன்மை தொழிற்சங்கங்களுக்கும் தங்களது தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்டு இணையம் மூல கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே, கோவிட் தொற்றுநோயுடன் நாடு போராடும் இந்த முக்கியமான கட்டத்தில், கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகள் கடந்த 24 ஆண்டுகளாகத் தொடர்கின்றன.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கைகளில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. கல்வி அமைச்சர் விரைவில் இது தொடர்பில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிடுவார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அமைச்சரவை அறிக்கை ஏற்கனவே விவாதத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமைச்சின் செயலாளராக, இணையக்கல்வியைத் தொடரக்கூறுவதைத் தவிர தம்மிடம் எதுவும் இல்லை.
இதேவேளை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்குச் செவ்வாய்க்கிழமை பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri