இங்கிலாந்தில் கசிந்த ஆப்கானிஸ்தானியர்கள் தொடர்பான இரகசியத் திட்டம்
இரகசிய திட்டம் ஒன்றின் கீழ் இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் கசிந்துள்ளதாக வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அதிகாரி ஒருவர் தற்செயலாக குறித்த தரவை கசியவிட்ட நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறித்த செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
600க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள்
இதன்படி,2022 பெப்ரவரியில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் இங்கிலாந்துக்குச் செல்ல விண்ணப்பித்த கிட்டத்தட்ட 19,000 பேரின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்துள்ளன.
அத்துடன் தலிபானின் ஆட்சிக்கு பின்னர் இதுவரை 4,500 ஆப்கானியர்கள் இங்கிலாந்துக்கு சென்றுள்ள விடயமும் கசிந்துள்ளது.
அவர்களில் தலிபானின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள 600க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதற்கிடையில் இங்கிலாந்துக்கு விண்ணப்பித்த முன்னாள் படையினர் பலர் இன்னமும் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியுள்ளனர் என்ற விடயமும் இந்த கசிவின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சூழு;நிலைகளில், நிகழ்ந்துள்ள தகவல் கசிவு குறித்த ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
