சாதாரண பரீட்சையில் சித்தியடையாததால் மாணவி எடுத்த விபரீத முடிவு
இரத்தினபுரியில் ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற பாடசாலை மாணவியை தீவிர முயற்சிகளின் பின்னர் உள்ளூர் மக்கள் காப்பாற்றியுள்ளனர்.
கலவான, வெட்டகல பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்தவர் என தெரியவந்துள்ளது.
பரீட்சையில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாக அவர் இவ்வாறு உயிரை மாயக்க முயன்றுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞர்கள் குழு ஒன்று தங்கள் மகளை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்று ஆற்றில் தள்ளிவிட்டதாக பெற்றோரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதுகாப்பு கமரா காட்சிகளை பயன்படுத்தி பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
பாதுகாப்பு கமரா
இந்த நிலையில் உள்ளூர் மக்கள் சிறுமியை மீட்டு கலவான பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையின் போது, பரீட்சையில் தோல்வியடைந்தமையால் இந்த முடிவை எடுத்ததாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri