அரசின் இரகசிய திட்டங்களால் துண்டாடப்படும் மணலாற்று பகுதி
வெலி ஓயா எல் வலயம் என்று சொல்லப்படும் மணலாற்றுப் பகுதி துண்டாடப்படுகின்ற திட்டத்தின் ஊடாக தமிழர் தேசியம் இனம் என்னும் சொல் இல்லாமல் அழிக்கப்படும் என பிரித்தானியாவிலிருக்க கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு,கிழக்கின் கழுத்து பகுதி இரகசிய திட்டங்களால் துண்டாடப்படுகின்றமை அவை இந்தியாவிற்கு ஆபத்தாக மாறி வரும் மணலாற்று திட்டம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர் தாயகத்தை துண்டாடுவது தான் சிங்கள தேசத்தின் இலட்சியம்.இதன் காரணமாகவே மணலாறு எனும் தமிழர் தாயக பகுதி வெலிஓயா எனும் பெயரில் மாற்றப்பட்டு விவசாய குடியேற்றம்,மீனவ குடியேற்றம் என்ற போர்வையில் மாற்றப்பட்டது. இவை அரசினுடைய படை சார்ந்த இராணுவ குடியேற்றங்களாகவே மாற்றினர்.
இதன் காரணமாகவே, மணலாற்றில் அரசினால் முன்னெடுக்கப்படும் இரகசியத் திட்டங்கள் இந்தியாவிற்கு பெரும் ஆபத்தாகவே அமைந்துள்ளது.
அரச அறிவியல் ஊடாக பார்ப்போமானால் இந்தியாவில் உண்மையானவே அரசியல் ராஜதந்திரிகள் கிடையாது. நிர்வாக ஒழுங்கு கட்டமைப்பிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் இந்தியர்கள் அரசியல் ராஜதந்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று இன்றுவரை கூற முடியாது.
உலகளாவிய மட்டத்தில் பார்ப்போமானால் ராஜதந்திரிகள் என்றும் யாரும் இல்லை.மிக சிறந்த அதிகாரிகள் உள்ளனர்.இருப்பினும் அவர்கள் தமிழர் தாயகம் தொடர்பான உண்மையான நிலப்பரப்புக்களை கொண்டவர்களாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று யாழில் அதிகாரிகளை வைத்துக்கொண்டு அனைத்தையும் கவனித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.