மார்ட்டின் வீதியில் தமிழரசு கட்சியின் இரகசிய கூட்டம்! வெடித்தது சர்ச்சை(Video)
தமிழரசு கட்சி தனித்து விட்டது அதற்கு எமது தலைமை தான் காரணம் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,தலைமையினால் தமிழரசு கட்சி இவ்வாறு தனித்து நிற்க வேண்டிய நிலை எற்பட்டது.
உதாரணமாக 7 வருடம் என்னுடன் பயணித்த ஜனநாயக போராளி இப்போது அங்கு செல்ல வேண்டிய நிலை எமது தலைமையின் அணுகுமுறையால் ஏற்பட்டது.
பல கோரிக்கைகளை முன்வைத்து செயற்பட்டமையால் கட்சிக்குள் பல முரண்பாடான நிலைமைகள் வந்தது உண்மை தான்.
இருப்பினும் தனியாக தமிழரசு கட்சி தான் இதை செய்தது என்று கூற முடியாது. மற்ற கட்சிகளும் இதனை உணர்ந்து செயற்பட்டிருந்தால் இந்த பிளவு வந்திருக்காது.”என கூறியுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
