டக்ளஸுக்கு பிணை! EPDPயின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய விடுதலை புலிகளின் தலைவர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் வரதராஜன் பார்தீபன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமீபக் காலமாக அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகிறார்கள். இவர்களின் கைதுக்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்படுவது, மருத்துவமனையில் வைத்திருப்பது பின்னர் பிணையில் செல்ல அனுமதிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படும் பொழுது சந்தோஷப்பட்ட தமிழ் மக்கள் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்ட போதும், சந்தோஷப்பட்டார்கள்.
இதுவே தமிழர்களின் தற்போதைய நிலை, தலைவர்கள் கட்சிக்காக அடித்துக் கொள்கிறார்கள். மக்கள் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார். இதனை பயன்படுத்தி, தான் சிங்கள தலைமைகள் உள்ளே வருகிறார்கள்.
அநுர ஆட்சிக்கு வரும் பொழுது வலியுடன் கூடிய வார்த்தைகளை பகிர்ந்துக் கொண்டார். ஆனால் காலப்போக்கில் அது வார்த்தைகளாகவே போய் விட்டது” என ஏமாற்றத்துடன் பேசியிருக்கிறார்.
இதுபோன்று நேர்காணலில் தமிழர்களின் அரசியல் பயணம் குறித்து வேறு என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது என்பதை காணொளியில் பார்க்கலாம்.