இராணுவத்தினரை பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் ரகசிய அகழ்வாய்வு: சபையில் பகிரங்கம்(Video)
புத்த சாசன அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் என்பன வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் எமது தேசத்தை திட்டமிட்டு சிங்கள பௌத்த மயமாக்குகின்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கபடுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொல்பொருளியல் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுகள் யாவும் இராணுவத்தினரை பயன்படுத்தி ரகசியமாக மேற்கொள்ளபடுகின்றன.
இதேவேளை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அதிகாரிகளை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.
முல்லைத்தீவு குருந்தூர் மலை, 1932 ஆம் ஆண்டு சுற்றறிக்கையில் அது ஒரு தொல்பொருள் இடம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளபோகிறோம் என கூறி அங்கு ரகசியமாக ஒரு விகாரை அமைக்கபட்டிருந்தது.” என கூறியுள்ளார்.
இது தொடர்பான செல்வராசா கஜேந்திரனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
