அடுத்த பாப்பரசர் யார்! வத்திக்கானில் ஆரம்பமான இரகசிய மாநாடு
புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய மாநாடு சிறிது நேரத்திற்கு முன்னதாக வத்திக்கானில்(vatican) அதிகாரபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையிலே, காலஞ்சென்ற பாப்பரசர் பிரான்சிஸ்க்குப் பின்னர், யார் பாப்பரசராக தெரிவாவார் என்பதைத் தீர்மானிக்க வாக்களிக்கும் 133 கர்தினால்களும் ரோமை அடைந்துவிட்டதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
அத்தோடு, ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 70 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் மாநாட்டிற்கு தகுதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய பாப்பரசர்
அதன்படி, புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடைபெற்ற தெய்வீக வழிபாட்டிற்குப் பிறகு, உலகம் முழுவதிலுமிருந்து கார்டினல்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் லத்தீன் மொழியில் "சாவியுடன்"(withkey) என்று பொருள்படும் "கொன்க்ளேவ்" என்று அழைக்கப்படும் மிகவும் இரகசியமான கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதேவேளை இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
