கழிப்பறைக்குள் மாணவிகளை படமெடுத்த இரகசிய கமரா - தாய் வெளியிட்ட வீடியோ மாயம்
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டதை வெளிப்படுத்திய தாயாரின் காணொளி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மேலதிக வகுப்பு நிறுவனம் நிரோஷா களுஆராச்சி என்ற நபரால் நடாத்தப்படுவதாகவும், அந்த நிறுவனத்தின் முகாமைத்துவம் (அட்டை சேகரிப்பு போன்றவை) நிறுவன தலைவரின் தாயாரால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கெமுனு ரணவீர என்ற ஆசிரியரின் தகவல் தொழில்நுட்ப வகுப்பில் கலந்து கொண்ட மாணவியால் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமரா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவி இது தொடர்பில் வகுப்பாசிரியர் கெமுனு ரணவீரதெரிவிடம் தெரிவித்த போது, “இது ஒரு பெரிய விடயம் அல்ல. அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இது பொதுவாக நடக்கும் விடயம்” என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவியின் தாயார் இந்த சம்பவத்தை ஊடகத்தின் முன்னால் எடுத்து வந்ததுடன், யூடியுப் சேனலில் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். எனினும் திடீரென அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.`

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
