பசிலுக்கும் சஜித்துக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம்: வாசுதேவ நாணயக்கார
பசில் ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை மூன்று வாரங்கள் வரை தாமதிப்பதற்கு சஜித் இணங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இணக்கப்பாட்டை ரணில் விக்ரமசிங்கவின் ஊடாக நிறைவேற்றி கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்தபோதும், பசில் ராஜபக்சவே அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பசில், சஜித் உடன் இருக்கின்ற இரகசிய ஒப்பந்தத்தின் மூலமாக, மகிந்தவை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam