தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்தின் பின் இரண்டாவது தடுப்பூசி! கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்
கிழக்கு மாகாணத்தில் 14,010 கொரோனா தடுப்பூசிகள் 258 நிலையங்களில் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகள், மாகாணத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகள் உட்பட வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார துறையினருக்கு முதற்கட்டமாக ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்கர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தடுப்பூசி ஏற்றும் உத்தியோக பூர்வமான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக சில தினங்கள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடரும். இதில் முதற்கட்டமாக சுகாதரா திணைக்களத்தின் கீழ் வருகின்ற 258 நிலையங்களில் தடுப்பூசி ஏற்ற திட்டமிட்டுள்ளோம்.
அதன் பிரகாரம் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள சுகாதார ஊழியர்களுக்கும் எங்களுடன் சேர்ந்து சுகாதார துறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றவர்களுக்கு இன்று கிழக்கு மாகாணத்தில் 113 நிலையங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திற்கு 2670, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 3400, கல்முனை பிராந்தியத்தில் 4870, அம்பாறை பிராந்தியத்தில் 3070 தடுப்பூசிகள் உட்பட 14010 தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
எனவே தடுப்பூசியால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அவதானித்து முடித்துள்ளோம்.
அதேவேளை ஒவ்வொரு பிராந்தியத்திலும் விசேட குழுக்கள் ஆரம்பித்து அந்த குழு தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும். தற்போது தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்தின் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும்.
அதேவேளை தடுப்பூசி மக்களைச் சென்றடைய பல மாதங்கள் ஆகும். எனவே பொதுமக்கள் உங்களையும் உங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாப்பாக வைத்து செயற்படவும் என கோரியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
