மருதனார்மடம் கொத்தணி: இரண்டாம் கட்டப்பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
யாழ்.மருதனார்மடம் பொதுச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருதனார்மடம் பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று அடையாளம் காணப்படவில்லையெனவும்,தனிமைப்படுத்தல் நிறைவு பெறும் போது மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.