நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் வாக்கெடுப்பு நிறைவேற்றம்
உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று (24) இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன.

முதலாம் வாக்கெடுப்பு
இதன்படி, இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
இதேவேளை நேற்றையதினம் நடத்தப்பட்ட முதலாம் வாக்கெடுப்பில் 33 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ஒருமைப்பாடு அலுவலக சட்டமூலம்
மேலும்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்திற்கு தாம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். எனவே இன்று முதல் இந்த யோசனை சட்டமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சட்டமூலத்துக்கு இலங்கையின் சில அரசியல் தரப்புக்கள் தமது
எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam