100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு
வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த ஊதிர வைரவர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று(02) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் போராட்டம்
“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்'' எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்றைய போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஏ9 வீதியின் ஓரத்தில் கவனயூர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் மக்கள் அமைதியான முறையில் அமர்ந்திருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தம்மை குறிப்பிடத்தக்கது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri