100 நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அச்சுறுத்தல்: முக்கிய ஆவணங்கள் திருட்டு (Photo)
திருகோணமலையில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனத்தின் காரியாலயம் ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் நேற்று(31) சேதமாக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை உவர்மலை கேணேசபுரத்தில் அமைந்துள்ள வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.வலகுசராசாவின் அரச சார்பற்ற நிறுவனமான அகம் நிறுவன காரியாலய கூரையை அடையாளம் தெரியாதவர்கள் உடைத்து உள் நுளைந்து அங்கு அலுமாரிகளை உடைத்து சோதனையிட்டுள்ளனர்.
மேலும் சிசிரிவி கமராவின் டிவி.ஆர் கழற்றி செல்லப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் க.லவகுசராசா தெரிவித்துள்ளார்.
100 நாள் கவனயீர்ப்பு போராட்டம்
மன்னாரில் இன்று(01) ஆரம்பமாகவுள்ள 100 நாள் கவனயீர்ப்பு போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக காரியாலயத்திற்கு சென்றுள்ள நிலையில் காரியாலயம் சேதமாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன், குறித்த காரியாலயத்தில் மடி கனிணி மற்றும் கனிணிகள், கமராக்கள் உட்பட பல பெறுமதியான பொருட்கள் இருந்தும் அவை எதுவும் அங்கிருந்து திருடப்படவில்லை.
பொலிஸார் விசாரணை
எனவே இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 நாள் போராட்டம் தொடர்பான ஒரு ஆவணத்தை தேடி இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.
யார் இங்கு வந்தார்கள் என்ன உரையாடினார்கள் என்பதை பார்பதற்காக சிசிரிவி கமரா டிவி.ஆர் கழற்றிச் சென்றிருக்கலாம் அல்லது இந்த 100 நாள் போராட்டத்தை நிறுத்துவதற்கான அச்சுறுத்தலாக இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
இந்த காரியாலய உடைப்பு சம்பவம் தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.