முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
கடல்நீர் வாடிகளுக்குள் புகுந்தமையினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை பிரதேச சபை உறுப்பினர் நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி கடற்றொழிலாளர்களின் வாடிகளுக்குள் இன்று (11.08.2026) காலை புகுந்ததால், அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் நேரில் சந்தித்து நிலைமைகள் தொடர்பிலும்., கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.








