இலங்கை போக்குவரத்து சபை கட்டாயமாக்கியுள்ள நடைமுறை
பருவ சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்களை இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குற்றம்
யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பருவ சீட்டை வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் பருவ சீட்டை வைத்திருப்பவர்கள், 1958 என்ற எண்ணை அழைத்து SLTB தகவல் மையத்திற்கு தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri