மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறை காற்றுடன் கடல் சீற்றம்: போக்குவரத்து அபாயம்(Photo)
இந்தியா - தனுஷ்கோடி மற்றும் மன்னார் பகுதிகளில் பலத்த காற்று வீசப்பட்டு வருகின்றது.
இதனால் தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகள் வழமைக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகின்றன.
முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள படகு நிறுத்தும் தளம் மீது கடல் அலைகள் மோதி 6 - 8 அடி உயரத்திற்கு ராட்சத அலையாக எழுந்து வருகிறது.
இதனைதொடர்ந்து தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்று வேக மாறுபட்டால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா , தென் தமிழகம் மற்றும் இலங்கை கரையோரம் போன்ற இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, 40-50 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக கடற்றொழிலாளர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி வடக்கு பாக் ஜலசந்தி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக 35-45 கி. மீ வேகத்தில் காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்புகள்
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் ஏற்படும் புழுதி புயல் வீசப்படுகின்றது.
இதன் காரணமாக தனுஷ்கோடி சாலையில் ஓரிரு இடங்களில் கடற்கரை மணலால் முடியுள்ளதையும் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
மேலும், கோதண்டராமர் கோவில் மூன்றாம் சத்திரம் பகுதியில் வசிக்கும் கடற்றொழிலாளர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலையும் எற்பட்டுள்ளது.



