தாழையடி கடற்பரப்பில் காணாமல் போன இளைஞன்!தொடரும் தேடுதல் நடவடிக்கை
யாழ்.வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்பரப்பில் காணாமல் போன இளைஞனைத் தேடும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
நேற்றுமுன்தினம்(28) தாழையடி கடற்கரைக்கு நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் கடலில் தத்தளித்தபோது அவர்களை கயிறு கொடுத்து காப்பாற்றிவிட்டு கரை திரும்பும் போது குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே ஆவார்.
தேடுதல் பணி
இந்தநிலையில் ,கடற்றொழிலாளர் மற்றும் கடற்படை இணைந்து குறித்த தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இதுவரை அவரை் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது கடல் கொந்தளிப்பு காரணமாக சுழியோடிகள் மூலம் தேடும் பணி மேற்கொள்ளப்பட முடியாதுள்ளதாக தேடும்பணியில் ஈடுபடும் கடற்படையினர் தெரிவித்தனர்.