திருகோணமலையில் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல்
திருகோணமலை மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள மாகாண பணிப்பாளர் ஏ.தர்மசீலன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக திருகோணமலை மதுவரித்திணைக்கள அதிகாரி எஸ்.கே வணிக சிங்க அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஜானி அத்தநாயக்க அவர்களின் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் திருட்டுத்தனமாக மதுபான சாலைகள் திறக்கப்பட்டதையடுத்து அனைத்து மதுபான சாலைகளுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இன்று (30) பிற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக திருகோணமலை மதுவரித்திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.






அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
