பாதாள உலகக் கும்பல்களின் புதிய உத்தி! தெஹிவளை குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் அடையாளம் - பொலிஸாரின் அறிவிப்பு
எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியில் இன்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
புதிய உத்தி
மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் கும்பல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக கைக்குண்டுத் தாக்குதல்களை ஒரு புதிய உத்தியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

அத்துடன், தெஹிவளை-மவுண்ட் லாவினியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.